சீனாவில் முதியவர் ஒருவருடைய கண்ணில் உயிருடன் இருந்த 20 புழுக்களை மருத்துவர்கள் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வட பகுதியை சேர்ந்தவர் 60 வயதான வான் பபே. இவருக்கு கடந்த சில நாட்களாக கண்ணில் கடும் அரிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிபட்டு வந்த அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் கண்ணில் புதிதாத அசையும் உயிரினம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கருவிகள் மூலம் கண்களை சோதனை செய்ததில் கண்ணின் கரு விழிக்குக்கு அருகில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் குழு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணில் இருந்த 20 புழுக்களை நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.