வடகொரிய அதிபர் கிம் பற்றிய சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை, அண்மையில் கரோனா தீவிரமாக இருந்த நிலையில் அவர் வெளியே வராமல் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால், திடீரென விழா ஒன்றில் அனைவரின் முன்பாகவும் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம். இதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பே பல முறை அவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி, பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்நிலையில், கிம் ஜாங் உன்-ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம், அவர் நலமுடன் இருக்கிறார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.