சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது டிக்டாக் செயலி. உலக அளவில் சிறந்த பொழுதுபோக்குச் செயலிகள் பட்டியலில் டிக்டாக் முக்கிய இடம் வகிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா சீனா மோதலையடுத்து இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்போவதாக அறிவித்தது. மேலும் டிக்டாக் செயலி அமெரிக்காவில் தடையில்லாமல் இயங்குவதற்கு வருகிற20-ஆம் தேதிக்குள் அதன் தொழில்நுட்ப நிர்வாகத்தினர், டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அமெரிக்க தொழில்நுட்பம் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்ததில் உடன்படிக்கை ஏற்படாததனால். அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அமெரிக்க நிறுவனமான ஓரக்கல் நிறுவனத்துடன் டிக்டாக் நிறுவனம் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சீன அரசு, டிக்டாக் நிறுவனம் தனது தொழுநுட்பத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்றால் அதற்கு அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.