Skip to main content

"ரஷ்யாவுக்கு இனி டெலிவரி கிடையாது.." - டிஹெச்எல் அதிரடி அறிவிப்பு

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

dfg

 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஏழாவது நாளாகத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரஸில் தொடங்கியது. ஆனால் எந்த முடிவு எடுக்கப்படாமல் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று இரவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யா தாக்குதலைப் பெரிய அளவில் முன்னெடுத்து வருவதால் உக்ரைன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமா? கலந்து கொண்டாலும் நல்ல முடிவு வருமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இருநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுப் போர் முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் போர் தொடருமா என்பது பெரும் எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அந்நாடுகள் தங்கள் நாட்டு வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளன. இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய டெலிவரி நிறுவனமான டிஹெச்எல் ரஷ்யாவுக்கு அனைத்து விதமான டெலிவரிகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்