Advertisment

வழுக்கை தலையில் முடி வளர வைக்க புதிய கருவி அறிமுகம்... வரவேற்கும் இளைஞர்கள்...

இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது முடி உதிர்வுதான். வேலை கிடைக்கவில்லை என கவலைப்படும் இளைஞர்களை விட முடி கொட்டுகிறதே என கவலைப்படும் இளைஞர்கள் தான் இன்று அதிகமாக உள்ளனர். இந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Advertisment

device to regrow hair in bald head

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர். தொப்பிக்குள் அணியக்கூடிய உரை போன்ற இந்த கருவியை தலையில் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து வரும் ஒருவகையான எலக்ரிக் ஆற்றல் முடியின் வேர் பகுதிகளில் உள்ள நரம்புகள் தூண்டி மீண்டும் முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இதனை தலையில் அணிந்து, தொப்பியை மாட்டிக்கொண்டு செல்லலாம் என்கின்றனர் இதனை கண்டறிந்தவர்கள். மேலும் இதற்கு தனியா பேட்டரிகள் எதுவும் தேவைப்படாது எனவும், நமது உடல் அசைவிலிருந்தே தனக்கு தேவையான ஆற்றலை இந்த கருவி எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முடி வளர வைக்கும் இந்த கருவிக்கு இளைஞர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

technology Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe