தினமும் 22 கிலோமீட்டர் தூரம் நடந்தே வேலைக்கு சென்றுவந்த பெண்ணுக்கு ஒரு தம்பதியினர் கார் வாங்கிக்கொடுத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisment

adrianna

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் வசித்து வரும் அட்ரியான்னா என்ற பெண், தனது வீட்டிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உணவு விடுதியில் உணவு பரிமாறுபவராக பணியாற்றி வருகிறார். தினமும் வீட்டிலிருந்து நடந்தே பணிக்கு சென்றுவந்த அவர், கார் வாங்குவதற்காக பணத்தை சிறுக சிறுக சேமித்தும் வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்றும் அவர் பணிக்கு வந்த போது, தங்கள் பெயரை கூற விரும்பாத தம்பதியினர்இவருக்காக ஒரு புது காரை வாங்கி கடை முன்பாக நிறுத்தியிருந்தனர்.

Advertisment

இதனை முதலில் prank show என நினைத்த அந்த பெண், ஆனால் உண்மையிலேயே அது அவருக்காக பரிசு என தெரிந்தவுடன் நெகிழ்ச்சியில் அழத்தொடங்கியுள்ளார். முந்தைய நாள் இரவில் அந்த உணவகத்துக்கு வந்து சாப்பிட்ட ஒரு ஜோடி அட்ரியான்னாவின் சேவையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதன் பின் அட்ரியான்னா குறித்தும், அவரது கார் வாங்கும் லட்சியம் குறித்தும் உணவக நிர்வாகத்தினரின் மூலம் அறிந்துகொண்ட அந்த தம்பதி இரவோடு இரவாக அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்று புதிய கார் ஒன்றை வாங்கி, அதனை அட்ரியான்னாவிடம் அளிக்கும்படியும் தங்களின் விவரங்களை வெளிப்படுத்த வேண்டாமெனவும் உணவக நிர்வாகத்தினரிடம் தெரிவித்து சென்றுள்ளனர். முன்பின் தெரியாத அந்த தம்பதியின் பரிசால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார் அட்ரியான்னா.