Skip to main content

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

பீட்சாவில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பி பீட்சாவை டெலிவரி செய்தவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் எஸ்கிபார்க் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு சாப்பிடுவதற்காக பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.  ஆர்டரை பெற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் தங்களின் டெலிவரி பாய்-யை குறிப்பிட்ட அட்ரஸ்க்கு பீட்சா டெலிவரி செய்ய அனுப்பியுள்ளது. 
 

cg



ஆனால் டெலிவரி செய்ய வந்த இளைஞர் குறிப்பிட்ட அட்ரசுக்கு வந்து, மாடியின் கிழே நின்று பீட்ஸாவை திறந்து அதில் எச்சில் துப்பியுள்ளார். இதை ஆர்டர் செய்தவர் சிசிடிவி காட்சியின் வழியே பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலிசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி பீட்சாவில் எச்சில் துப்பியவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீட்ஸா கடையில் இறந்துகிடந்த பூனை...  கடையை மூடிய மாநகராட்சி அதிகாரிகள்

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

கோவை ஆர்எஸ்.புரம், அன்னபூர்ணா பின்புறம் உள்ள கன்னுசாமி சாலையில் உள்ள zucca PIZZA கடையில் பூனை 2 நாட்களாக இறந்து கிடந்திருக்கிறது. பக்கத்து கடைக்காரர்கள் பீட்ஸா கடைக்காரரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல், கதவை சாத்தி வைத்துக்கொண்டு, பீட்ஸா விற்பனையை நடத்தி வந்தனர்.

 

Cat in a pizza shop ... Municipal officials who closed the shop



அருண் என்பவருக்கு சொந்தமான இந்த பீட்ஸா கடை கோவை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த பீட்ஸா கடைக்கு பின்புறத்தில், அடுக்கி வைத்திருந்த உணவு பொருட்களை சாப்பிட்ட பூனையும், இரண்டு எலிகளும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சாப்பிட்டு இறந்து போய் விட்டது.

 

Cat in a pizza shop ... Municipal officials who closed the shop


இதை பீட்ஸா கடையினர் கண்டுகொள்ளாமல், பின்பக்க கதவை சாத்திவிட்டு வியாபாரத்தை பார்த்துள்ளனர். இறந்த பூனையின் உடலில் துர்நாற்றம் வீசி, புழுக்கள் வரத்துவங்கியது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் பக்கத்து கடைக்காரர்கள் புகார் அளித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துபோன பூனையை அப்புறப்படுத்தியும், பீட்ஸா கடையை பூட்டி சென்றனர். இந்த பீட்ஸாக்களை விரும்பி சாப்பிடும் மனிதர்களின் உடல் நலம் என்னாகும்? மிக முக்கியமாக குழந்தைகள் உடல் என கேள்வி எழுப்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். 

இதுகுறித்து பீட்ஸா கடையின் உரிமையாளர் அருண் கூறுகையில், "சார்... நீங்கள் தான் என் கருத்தை கேட்குறீர்கள். அந்த பூனை இறந்து கிடந்தது என் கடைக்குள் இல்லை. அது நிறைய கடைகள் இருக்கும் பொது வழியில் கிடந்தது. ஆனால் என் கடைக்குள் இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தவறாக நினைத்து கடைக்கு சீல் வைத்து விட்டனர். சீல் உடைக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

 


 

Next Story

"பீட்சா டெலிவரி பாயின் வில்லங்கம்...வேதனையில் தவிக்கும் பெண்..!"

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

சென்னை தேனாம்பேட்டை காவல் சரகத்தில் வசிப்பவர் ரேணுகா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை தொலைபேசியில் அழைத்த நபர், 'அந்த' உறவுக்கு அழைத்துள்ளார். தான் 'அப்படிப்பட்ட நபர்' அல்ல என்று விளக்கிய பிறகும், தொடர்ச்சியாக வேறு சில நபர்கள் போன் செய்து, பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.

 

"Pizza Delivery Villain ... Suffering Woman ..!"


இதனால் சுதாரித்த ரேணுகா அழைத்த நண்பர்களிடமே, தன்னுடைய மொபைல் நம்பர் எப்படிக் கிடைத்தது என விசாரித்துள்ளார். அப்போது 'சென்னை பாலியல் தொழில் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் இருந்து ரேணுகா செல்நம்பர் பரமேஸ்வரன் என்பவரால் பகிரப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

 

"Pizza Delivery Villain ... Suffering Woman ..!"


இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரேணுகா புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், பரமேஸ்வரன் பிரபல பீட்சா நிறுவனத்தில் டெலிவரி செய்யும் நபர் என்பதும், கடந்த 9-ந்தேதி ரேணுகாவிற்கு பீட்சா டெலிவரி எடுத்து சென்றவர், பின்னர் ரேணுகாவின் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தது தெரியவந்திருக்கிறது.

பரமேஸ்வரனையும், ரேணுகாவை தவறான கண்ணோட்டத்தில் அழைத்தவர்களையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீட்சா நிறுவனத்தின் நிர்வாகியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.