Declaration of emergency in America

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மணிக்கு 72 கி.மீ வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால், சாலை, ரயில், விமான ஆகிய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல்வேறு விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், மேரிலேண்ட் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி ஆகிய மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.