Advertisment

வெறும் கண்ணாடி மோதிரத்தால் ஜாக்பாட் அடித்த இலண்டன் பெண்...

dd

லண்டனை சேர்ந்த டெப்ரா காடார்ட் எனும் 55 வயதான பெண், லண்டனில் வசித்துவருகிறார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு, ஏலம் போன்ற விற்பனை மையத்தில் ஒரு கண்ணாடி மோதிரத்தை மிக குறைவான விலைக்கு வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் வெறும் ரூ. 920 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதிரத்தை சில முறை மட்டும் பயன்படுத்திவிட்டு அப்படியே வீட்டில் வைத்துள்ளார். தற்போது அவருக்கு பணத்தேவை ஏற்பட, தன்னிடம் உள்ள கல் மற்றும் கண்ணாடி மோதிரங்களை விற்கலாம் என்று யோசித்துள்ளார். அதன்பின் அந்த மோதிரத்தை நகைக்கடைக்கு கொண்டு சென்ற டெப்ராவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மோதிரத்தை வாங்கிய நகைக்கடைக்காரர்கள் இந்த மோதிரம் வைரத்தால் ஆனது, இது இந்திய மதிப்பில் ரூ.6.8 கோடி என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட டெர்பா இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மேலும் அந்த வைர மோதிரத்தைஏலமிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

diamond
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe