Skip to main content

கென்யா நிலச்சரிவு - 55 பேர் பலி!

Published on 25/11/2019 | Edited on 26/11/2019

கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிவருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஓரிடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் அந்தவழியாக சென்றுகொண்டிருந்த கார் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் தள்ளப்பட்டது. அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துள்ளனர்.



மேலும் 55 பேர் நிலச்சரிவுகளில் பலியாகியுள்ளனர். இவர்களில் ஏழு குழந்தைகளும் அடங்குவர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மேற்கு போகோட் ஆளுநர் ஜான் க்ரோப் அல் ஜெஸீரா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது, "இதுபோன்ற பேரிடரை இதற்கு முன் நாங்கள் எதிர்கொண்டதே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதபோதகரின் பேச்சைக் கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள்; 81 பேரின் சடலம் தோண்டியெடுப்பு

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

'இயேசுவை காணலாம் வாங்க' என போதகரின் பேச்சைக் கேட்டு 80க்கும் மேற்பட்டோர் கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கென்யாவின் மலிந்தி பகுதியில் உள்ள ஷஹாகோலா எனும் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஒன்றில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தமாக 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் முதல் கட்டமாக கண்டெடுக்கப்பட்டது. 'இயேசுவை காண வேண்டுமென்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும்' என்று மத போதகர் கூறியதை நம்பிய அப்பகுதி மக்கள் பட்டினி கிடந்துள்ளனர்.

 

இறுதியில் உணவின்றி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பின்னணி வெளியானது. இது தொடர்பாக மத போதகர் பால் வேகன்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கட்ட தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சட்டங்கள் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் குழுக்கள் நடத்தி வரும் தேடுதலில் மேலும் பல உடல்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.

 

 

Next Story

சென்னை வழியாக ஆந்திரா சென்றவருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

'OmiCron' damage to Andhra Pradesh via Chennai!

 

சென்னை வழியாக ஆந்திரா சென்ற நபருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

 

கென்யாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் திருப்பதிக்குக் காரில் சென்ற 39 வயது பெண்ணுக்கு 'ஒமிக்ரான்' கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

 

'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்நலன் சீராக இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஆந்திராவில் 'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.