Advertisment

தாய்லாந்தில் குகையில் சிக்கிய 13 பேரை மீட்க சென்ற வீரர் மரணம்!!

தாய்லாந்தில் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்தாட்ட வீரர்களை மீட்க சென்ற வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Advertisment

தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதிமலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.

Advertisment

CAVE

இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களைதேடும்பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் இதுவரை குகையில் மயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருந்த இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.

அப்போது பல சிரமங்களை கடந்து சிலமீட்புவீரர்கள் சிக்கிக்கொண்ட கால்பந்தாட்ட வீர்கள் இருந்த இடத்தை கண்டறிந்தனர். அந்த பகுதியைநோக்கி டார்ச் லைட் அடித்த மீட்பு பணியாளர் ஒருவர் எத்தனை பேர் உள்ளீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் 13 பேரும் பத்திரமாக உள்ளோம் என கூறியுள்ளனர். இதை கேட்டு சிரித்த அந்த மீட்பு பணியாளர் நீங்கள் மிகவும் திறமைசாலிகள் என கூறிவிட்டு திரும்பியுள்ளார். மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்ததை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தற்போதுவரை ஈடுபட்டு வருகிறது மீட்பு குழு.

CAVE

இந்நிலையில் குகைக்குள் வெள்ளநீர் உள்ளதால் சிறப்பு நீச்சல் பயிற்சிக்கு பிறகே அனைவரையும் மீட்கமுடியும் அல்லது வெள்ளம் வடியும்வரை காத்திருக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளதால் தினமும் உள்ளே சிக்கிக்கொண்டவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை பொருட்களை கொண்டுசென்று கொடுக்கும் பணியில் மீட்பு குழு இறங்கியுள்ளது. மேலும் அனைவரையும் அந்த குகையிலிருந்து வெளிக்கொண்டுவர எப்படியும் பலமாதங்கள் ஆகலாம் அதுவரை உள்ளே அவர்களால் உயிருடன்இருக்கமுடியுமா என்பதே சந்தேகம் என செய்திகள் வெளியான நிலையில் அவர்களுக்கான அடிப்படை பொருட்களை கொண்டு சென்ற மீட்பு பணிவீரர் மூச்சு திணறலால் இறந்துள்ளார்.

38 வயதான சமன் குணன் என்ற மீட்பு வீரர் உள்ளே சிக்கி தவிப்பவர்களுக்குதேவையானபொருட்களை எடுத்து சென்று திரும்பும் வழியில் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இவர் அண்மையில் கடற்படையில் பணியை விட்டுசென்றவர் இந்த மீட்பு பணிக்காக மீண்டும் வந்துசேர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி உள்ளேசிக்கித்தவிக்கும் 13 பேருக்கும் பிராணவாயுவான ஆக்சிஜனை வழங்கவேண்டும்என்ற பணியும் இவரிடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் திரும்பிவரும் வழியில் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுதிணறி இறந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

football
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe