Skip to main content

எல்லை தாண்டிய மாட்டுக்கு மரண தண்டனை! - ஆவணங்கள் இல்லாததால் அதிரடி

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

உரிய ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. 
 

penka

எல்லை தாண்டி சிக்கிக்கொண்ட பென்கா 

 

 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியா எல்லைகளுக்கு இடையே சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி எல்லையைக் கடக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இங்கு இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் பல்கேரியாவின் மஜாராசிவோ என்ற கிராமத்தில் இருந்து பென்கா எனும் 5 வயது மாடு, மேய்ச்சலில் இருந்தபோது தவறுதலாக செர்பியா எல்லைக்குள் நுழைந்தது. 
 

கிட்டத்தட்ட 2 வாரங்கள் செர்பியாவில் சுற்றித்திரிந்த பென்கா பின்னர் நாடு திரும்பியது. இந்நிலையில், செர்பியாவில் இருந்து பல்கேரியா சென்ற அதிகாரிகள், பென்காவை தூக்கிச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு உரிய சுகாதார ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த குற்றத்திற்காக பென்காவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 
 

 

 

இதனை ஐரோக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர்கள் தீவிரமாக எதிர்த்தனர். பென்காவை உயிருடன் மீட்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டங்களின் விளைவாக பென்கா மீதான தண்டனை வாபஸ் பெறப்பட்டுள்ளது. பென்காவை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்கு தூக்கு; சிங்கப்பூரில் தமிழருக்கு தண்டனை நிறைவேற்றம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

 Hang for smuggling one kilogram of ganja; Execution of sentence for Tamil person in Singapore

 

உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்கள் சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது.

 

இந்நிலையில் சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை விநியோகம் செய்வதற்கு போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

இதற்காக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சிறையிலிருந்த அவர் இன்று தூக்கிலிடப்பட்டு தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.  

 

 

 

Next Story

‘பசுவதையை நிறுத்தினால் பூமியிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்’ - குஜராத் நீதிமன்றம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Gujarat court has said that if cow slaughter stopped, all problems solved

 

கடந்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலிருந்து பசு மாடுகளை கடத்தி வந்ததாகக் கூறி முகமது அமீன் என்பவர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

அதில், “பசுவதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது. பல நோய்களுக்குப் பசுவின் சிறுநீர் அருமருந்தாக உள்ளது” என்று தெரிவித்திருக்கின்றனர்.

 

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்றும் பசுக் காவலர்கள் என்ற பெயரில்., மாட்டு இறைச்சி விற்பவர்கள், சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நீதிமன்றத்தின் இந்தக் கருத்து வியப்பாக இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்து எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.