David Cameron on the field for Ukrainian refugees!

உக்ரைன் நாட்டு மக்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வரும் சூழலில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேம்ரூன், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை போலந்து வரை தானே ஓட்டிச் சென்றுள்ளார்.

Advertisment

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேம்ரூம், "உக்ரைன் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் மக்கள் தாராளமாக பொருளுதவி வழங்கியதற்கு நன்றி" எனத் தெரிவித்துக் கொண்டார்.

David Cameron on the field for Ukrainian refugees!

Advertisment

மேற்கு ஆக்ஸ்போர்டு ஷையரில் உள்ள சிப்பிங் நார்டான் நகரில் இயங்கும் உள்ளூர் தன்னார்வ அமைப்புடன் இணைந்து போலந்தில் தஞ்சமடைந்திருக்கும் உக்ரைன் அகதிகளுக்காக நன்கொடைகளை வசூலித்தார். அதில் சேர்ந்த பணத்துடன் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்கியதோடு, பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை போலந்து வரை டேவிட் கேம்ரூன் தாமே ஓட்டிச் சென்றார்.