Advertisment

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்;இந்தியா கண்டனம்

Damage to Gandhi statue in America - India condemns!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

Advertisment

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியவர்கள் குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியதற்கு இந்தியத்தூதரகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அத்துடன், சிலையைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, அமெரிக்க அரசிடம் தூதரகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் தலை தூக்கியுள்ள நிலையில், மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியது அமெரிக்கா வாழ் இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

statue newyork America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe