மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

malawi

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த மூன்று நாடுகளுக்கும் ஒரே இரவில் தலைகீழாக திருப்பிபோடப்பட்டுள்ளது. இந்த புயலில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, சாலைகள் இல்லாத பகுதிகளில் சிக்கி தவிப்பதாக ஐ.நா சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் இரவு தாக்கத் தொடங்கிய புயல் ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய இடங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள், தொழில்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகியுள்ளன. ஐநா அமைப்பும், செஞ்சிலுவை சங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றன.