Curtains between students! -Photo released after Taliban instruction!

Advertisment

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஆட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, பாஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்ஆப்கானில் உள்ள கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக தலிபான்கள், மாணவர்களுக்குத்தனியாகவும் மாணவிகளுக்குத்தனியாகவும் வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தநிலையில், காபூலில் உள்ள அபிஸீனாபல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி வகுப்புகளில்ஆசிரியர்கள் தட்டுப்பாடு காரணமாக தனித்தனியாக வகுப்புகள் நடத்த முடியாததால்ஒரே வகுப்பில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இடையே திரைச்சீலை அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்வெளியாகியுள்ளது.