லாஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு பிறப்பிப்பு

Curfew imposed in Los Angeles

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்தஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 44 ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாகவும், டிரம்ப் குடியேற்றச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் 7ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தியதால் போர்களமாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதரவாகவும், டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களும் வெகுவாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தும், பொது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தொடர்ந்து 4வது நாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் என்.ஜி எனப்படும் தேசிய காவல் படை போலீசார் அனுப்பி வைத்து அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதால் லாஸ் ஏஞ்சல் பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

America Donad trump night curfew los angeles
இதையும் படியுங்கள்
Subscribe