ADVERTISEMENT

7,000 பேரை வேலையை விட்டு அனுப்பும் பிரபல எம்.என்.சி..? அச்சத்தில் ஊழியர்கள்...

12:49 PM Nov 01, 2019 | kirubahar@nakk…

உலக அளவில் பல நாடுகளில் செயல்பட்டுவரும் காக்னிசன்ட் நிறுவனம் தனது நிறுவனத்திலிருந்து 7000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், 70 சதவிகிதம் பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 7 ஆயிரம் பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்களையும், சமூகவலைத்தள பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுபவர்களில் சுமார் 6 ஆயிரம் பேரையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சமூகவலைத்தள பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொ‌ள்ளும் ஒப்பந்தங்களிலிருந்து காக்னிசண்ட் நிறுவனம் வெளியேறுதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் ஹம்ப்ரிஸ் தெரிவித்துள்ளார். பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த தகவலின் காரணமாக அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT