Advertisment

கால் வைக்கும் இடமெல்லாம் முதலைகள்; வைரலாகும் வீடியோ

Crocodiles everywhere; A viral video

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் சாலை ஓரத்தில் அருகே உள்ள நீர் நிலையின்கரை பகுதிகளில் காணப்படும் இடமெல்லாம் முதலைகள் ஆங்காங்கே படுத்திருக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை அம்பாறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள நீர்நிலை ஒன்றைக் கடந்து மாலை நேரங்களில் கால்நடைகள் மேய்ச்சலை முடித்து ஓட்டி செல்லப்படுகிறது. இந்நிலையில் நீர் நிலையில் உள்ள முதலைகள் அனைத்தும் அவற்றை வேட்டையாடுவதற்காகக்கரைப்பகுதியில் காத்திருக்கும் இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேய்ச்சலுக்குத்திரும்பும் எருமை மாடுகளை வேட்டையாடவே முதலைகள் அதிகம் கரைப்பகுதிகளில் காத்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஆங்காங்கே உள்ள சிறு சிறு நீர்நிலை திட்டுகள் மீது முதலைகள் வேட்டையாடுவதற்காக காத்திருக்கும் அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீர்நிலையைஒட்டிய பகுதிகளில் அதிகமாக முதலைநடமாடுவது அந்தப் பகுதி மக்களுக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

Advertisment
crocodile srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe