சில நாட்களுக்கு முன் மும்பையில் பெய்த கனமழையின் போது 10க்கும் மேற்பட்ட முதலைகள் வீடுகளுக்குள் படையெடுத்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் குஜராத்தின் வடோதரா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஆற்றில் இருந்த முதலைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான சம்பவங்களும் நடந்தது. அதேபோல் தற்போது ஒரு முதலை செய்த காரியம் இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது அமெரிக்காவில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஃப்ளோரிடா பகுதியில் காரில் போய் கொண்டிருந்த க்ரிஸ்டினா ஸ்டீவர்ட் என்பவர் அந்த பகுதியில் ஒரு முதலையை பார்த்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சாலையின் ஓரமாக கம்பிவேலி அருகே சென்று கொண்டிருந்த முதலை வேலிக்கு அடுத்த பக்கம் போக முயற்சித்திருக்கிறது. வேலியில் முன்னங்கால்களை வைத்து மனிதர்கள் போலவே ஏறிய முதலை அலேக்காக அடுத்த பக்கம் தாவி இறங்கி சென்றிருக்கிறது. முதலை செய்த இந்த ஸ்டண்டை வீடியோ எடுத்த அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் லைக் செய்து, ஷேர் செய்து வருகிறார்கள்.