Skip to main content

கோல்ப் மைதானத்தில் குறுக்கே புகுந்த முதலை - வைரல் வீடியோ!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலைகளின் நடமாட்டம் கடந்த சில வருடங்களாகவே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 6 மாதங்களாக அவை மனிதர்கள் நடமாடும் பகுதிகளில் சர்வ சாதரணமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில், ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கோல்ப் விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த 7 அடி நீள முதலை ஒன்று அவரை கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்திருக்கிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


அதை பார்த்த அவர் எப்போதும் போல கோல்ப் விளையாடியிருக்கிறார். பந்து முதலையின் தலைக்கு மேல் பறந்து போன போதும்,  முதலை அவரை தாக்க முயற்சிக்கவில்லை. இதற்கு முன்னர் இதே போல கடந்த வாரம்  மழை நேரத்தில் ராட்சத முதலை ஒன்று கோல்ப் மைதானத்தை கடந்து போன வீடியோ வெளியானது.

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 crocodile entered a house near Chidambaram

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story

துரத்திய நாய்; பயந்து தண்ணீரில் இறங்கிய முதலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The dog that chased the crocodile; A scared crocodile got into the water

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது.  முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.