Advertisment

விபத்தில் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு! 

Cricketer Andrew Symonds car incident

Advertisment

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் பகுதியில் காரில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்றுக் கொண்டிருந்த போது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் புரண்டதாகவும், இதில் பலத்த காயமடைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1998- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை ஆல் ரவுண்டராக வலம் வந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு பக்க பலமாக இருந்தவர். ஆஸ்திரேலிய அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் எடுத்துள்ளார். 2003, 2007 உலகக் கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடியுள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் ஷேன் வார்னே, ராட் மார்ஷ் ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Australia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe