பவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு என்ற முறை நீக்கப்படுவதாக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு என்ற முறையை ஐசிசி நீக்கியுள்ளது. மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் முடிவை எட்டும் வரை சூப்பர் ஓவர் முறையை பின்பற்ற ஐசிசி முடிவு செய்துள்ளது. அதேபோல் ஐசிசி தொடர்களின் லீக் போட்டிகளிலும் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

CRICKET RULES AND CHANGED IN ICC ANNOUNCED WORLD CUP FINAL MATCH ISSUE

அண்மையில் இங்கிலாந்து நாட்டில் நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி அடிப்படையிலான போட்டி முடிவால் சர்ச்சை ஏற்பட்டது. பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் குழு அளித்த பரிந்துரையை ஏற்று பவுண்டரி அடிப்படையிலான போட்டி முடிவு என்ற முறை நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.