மலேசியாவில் கிரேன் ஒன்றை ஏற்றிவந்த லாரி சாலையின் குறுக்காக இருந்த நடைபாதை மேம்பாலத்தை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் பினாங்கு பகுதியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலத்தை கிரேன் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

Advertisment

இதில் பாலம் பாதி சரிந்த நிலையில் அதில் இருந்தவர்கள் எல்லாம் இறங்கி தங்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டார்கள். இதை பார்த்த லாரியின் பின்னால் வந்தவர்கள் தங்களின் வாகனங்களை கூட அப்படியே போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.