ஒரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த வறட்டி இன்று அரிய பொருளாகி அதிகவிலையில் விற்பனையாக்கப்படுவதாகப் பலர் பேசினார். இந்நிலையில் ட்வீட்டரில் தற்போது சமர் ஹலான்கர் என்பவர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ214க்கு விற்பனைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை ஆன்லைனில் இந்த மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த விலையை விட மிகக் குறைந்த விலையாகும். மேலும் அவர் அந்த பதிவில் இப்பொழுது என் கேள்வி இது நாட்டு மாட்டுச் சாணமா? அல்லது அமெரிக்க மாட்டுச் சாணமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தது. இந்த பொருள் பூஜை பயன்பாட்டிற்காக மட்டும் சாப்பிடுவதற்காக அல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். நல்ல வேளையாக அதைக் குறிப்பிட்டுள்ளனர்.