ஒவ்வொரு நாளும் இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போடு மாடுகள் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கேசவன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், மழை சாரல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் மாடுகள் கூட்டம் சாலையை கடக்கின்றன. அப்போது சாலையில் குறுக்காக போடப்பட்டிருந்த கோடுகளை தடுப்பு சுவர் என்று நினைத்து அதனை மாடுகள் தாண்டி செல்கிறது. இந்த வீடியோவை பகிந்துள்ள அவர், வாழ்க்கையில் எத்தகைய தடைகளையும் இதை போலவே கடந்து செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.