covid 19

உலகைஅச்சுறுத்திவரும் கரோனாவைரஸ், தற்போது மரபணுமாற்றமடைந்து, புதிய வகை கரோனவாக மாறியுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப்புதிய வகை கரோனாவேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை கரோனாபரவலை தடுக்கும் விதமாக,இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில் ஜப்பான் மற்றும் பிரான்சில், புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஐந்து பேருக்கும், பிரான்ஸ் நாட்டில் ஒருவருக்கும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

புதியவகை கரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுள்ள இந்த 6 பேரும்சமீபத்தில் இங்கிலாந்து சென்றுதிரும்பியவர்கள் எனவும், அவர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள் குறித்துகண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.