Advertisment

முத்தம் கொடுத்த போது விபரீதம்... பாலத்தில் இருந்து தவறிவிழுந்த காதல் ஜோடி பலி!

பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகள் மேத் எஸ்பினாஸ் மற்றும் ஹெக்ட்டார். இருவரும் பெத்தலேகேம் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாலத்தில் இடையில் ஒரு இடத்தில் நின்று பேச தொடங்கி அவர்கள் பேச்சுவாக்கில் இருவரும் பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏறி அமர்ந்தனர். இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் முத்தங்களை பறிமாறிக்கொண்டனர். இந்நிலையில், முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இருவரும் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

Advertisment

f

சுமார் 60 அடி உயர பாலம் என்பதால் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த காட்சிகள் பாலத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisment
kiss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe