
உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் சாகசங்கள் நிகழ்த்தி மக்களை மகிழ்விக்கும் கலைகளில் ஒன்று 'சர்க்கஸ்'. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பல்வேறு சாகசங்களை மக்களின் முன் நிகழ்த்தி கைத்தட்டல் வாங்கும் சர்க்கஸ் குழுவினர் ஏராளம். இந்த நிலையில் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று சோகத்தையும்பரபரப்பையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் சர்க்கஸ் நிகழ்வு ஒன்றின் போது கணவனும் மனைவியும் அந்தரத்தில் தொங்கியபடி சாகசங்களை செய்து கொண்டிருந்த பொழுது கணவர் தவறி மனைவியின் கையை விட்டதால் கீழே விழுந்த மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் சுகோ நகரில் வாழ்ந்து வந்தனர் சுகோ மவ்மவ் - சன் மவ்மவ். கணவன் மனைவியான இருவரும் சர்க்கஸில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சர்க்கஸ் நிகழ்வில் கலந்து கொண்டு இருவரும் அந்தரத்தில் சாகச நிகழ்வுகளை நிகழ்த்திக் காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சுகோ மவ்மவ் மனைவி சன் மவ்மவ் கைகளைத்தவறவிட்டதால் சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சன் மவ்மவ் இறந்து போனார். உயிரிழந்த மனைவியின் உடலை பார்த்து சுகோ மவ்மவ் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)