Advertisment

குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் வைத்த தம்பதி... காரணத்தை கேட்டு திகைக்கும் நெட்டிசன்கள்!

The couple named the child 'Pakoda'... Netizens are trolling for the reason!

ஒரு தம்பதிதங்களது குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி நிட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

சமூக வலைத்தளங்களில் சில வார்த்தைகள் ட்ரெண்டாகும்போது அவை குழந்தைகளின் பெயர்களாக மாறுவது சமீபகாலமாகவே நிகழ்ந்து வருகிறது. அதன்.படி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனாவின் பெயரைக் கூட சிலர் அவரது குழந்தைகளுக்கு வைத்திருந்தது இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையின் தாய் கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பக்கோடாவை விரும்பி சாப்பிட்டதாகவும், அதனால் தனக்கு பிடித்த உணவின் பெயரான பக்கோடாவையே குழந்தையின் பெயராக வைத்திருப்பதாகவும் தம்பதி தெரிவித்துள்ளனர். பக்கோடாவை வட மாநிலத்தில் 'பக்கோரா' என்று அழைக்கப்படும் நிலையில் அப்பெயரை குழந்தைக்கு பெயர் சூட்டி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Advertisment

name
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe