ADVERTISEMENT

குழந்தை பிறப்பிற்கே ஆபத்தான நாடுகள்! - யூனிசெப் ஆய்வறிக்கையில் பகீர்

06:43 PM Feb 20, 2018 | Anonymous (not verified)

குழந்தை பிறப்பதற்கே தகுதியில்லாத, ஆபத்தான நாடுகளின் பட்டியலை யூனிசெப் சமீபத்தில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிக்கையில் பிறந்து 28 நாட்கள் முடிவதற்குள் உயிரிழக்கும் குழந்தைகள் விகிதத்தை, நாடுகள் வாரியாக யூனிசெப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்து நிறைந்த நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் படி இங்கு ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 46.5 குழந்தைகள் சராசரியாக இறக்கின்றன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவற்றிலும் பாகிஸ்தானுக்கு நிகரான சூழலே நிலவுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

கீழ்-நடுத்தர வருமானம் ஈட்டும் இந்தியா உள்ளிட்ட 52 நாடுகளில், இந்தியா 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 25.4 குழந்தைகள் உயிரிழக்கின்றன.

ஜப்பான், ஐஸ்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்புமில்லை. உலகில் ஆண்டொன்று 26 லட்சம் குழந்தைகள் பிறந்த சில நாட்களில் இறக்கின்றன. இந்த மரணங்கள் அனைத்தும் எளிதில் தவிர்க்கக்கூடிய நிலையில் இருந்தும் நிகழ்கின்றன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முறையான மருத்துவ வசதியில்லாமை, நிமோனியா மாதிரியான தொற்றுநோய்கள், பிரசவத்தின் போது ஏற்படும் குழப்பங்கள் உள்ளிட்டவையால் இந்த மரணங்கள் நிகழ்கின்றன என்றும், இவற்றை சுலபமாக தடுக்க முடியும் என்றாலும், அலட்சியம் மரணங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT