கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைப் பரிசோதிக்கும் பணியைத் தொடங்கியது அமெரிக்கா.வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டின் நகரில் அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனம் ஆய்வை தொடங்கியது. முதல் முறையாக 43 வயதான ஜெனிஃபர் ஹெலர் என்ற பெண்ணுக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
ஜெனிஃபரை தொடர்ந்து 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 19- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை என்று அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகளைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.