ADVERTISEMENT

பசியால் துடித்த குழந்தைகள்... சமைப்பது போல் பாவனை செய்த அம்மா - கரோனா கோரம்!

03:23 PM May 01, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


உணவு சமைக்க வழியில்லாத காரணத்தால் சமைப்பது போல் குழந்தைகளிடம் தாய் ஒருவர் பாவனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT


பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்கள் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் உணவுக்குச் சிரம்மப்படுகிறார்கள். கென்யாவில் மிகவும் அதிர்ச்சியாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்தவர் பெனினா பகட்டி. கணவனை இழந்த அவர் தன்னுடைய குழந்தைகளுடன் வசிந்து வந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் சமைக்க உணவில்லாமல் சிரமபட்ட அவரிடம் குழந்தைகள் உணவு கேட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், அடுப்பில் தண்ணீர் வைத்து அதில் கல்லைப் போட்டு சமைப்பது போன்று பாவலா செய்துள்ளார். குழந்தைகளும் அம்மா சமைப்பதாக நினைத்துள்ளனர். தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ள இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் மனவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT