உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைதங்களது நாட்டில் பரவாமல் தடுக்க, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kjl_0.jpg)
இந்நிலையில், கரோனா தாக்கி அதிக உயிரிழப்புக்களை சந்தித்த இத்தாலியில் தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 570 பேர் பலியாகிய நிலையில், கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவு என தெரிவித்துள்ளனர். மரணங்கள் நடைபெற்று வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)