ADVERTISEMENT

கொரோனா-வை வென்ற 5 வயது சிறுமி... மருத்துவமனையில் நடனமாடிய வீடியோ வைரல்!

07:51 AM Feb 21, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


ADVERTISEMENT


சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவை சேர்ந்த 5 வயது சிறுமி 16 நாள் சிகிச்சைக்கு பின்பு பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் மருத்துவமனையில் அவர் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT