இங்கிலாந்தில் கரோனாதொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனாதடுப்பூசிமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தாலும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தமுடியாதநிலை நீடிக்கிறது. இதனால் ஏற்கனவே அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த தீவிரஊரடங்கு, தற்போது ஜூலை17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு, சத்தமே இல்லாமல் ஊரடங்கு நீட்டிப்பைஅமல்படுத்தியுள்ளதாக, இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கரோனாதோற்றால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளிலிருந்து, இங்கிலாந்திற்கு வருபவர்களை 10 நாள் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் கூறியுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை, "கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து கருத்தில்கொள்ளவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வரும் வரையில், ஊரடங்கு விதிகளில் தளர்வு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கவும் படாது" எனதெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கரோனாபலி எண்ணிக்கைக்கு உருமாறிய கரோனா வைரஸ்காரணமாக இருக்கலாம்எனதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.