ADVERTISEMENT

உலகளவில் 9 லட்சத்தை தாண்டியது கரோனா வைரஸ் பாதிப்பு!

12:47 AM Apr 02, 2020 | Anonymous (not verified)

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 185 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பதால், உலகில் வளர்ந்த நாடுகளே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன. கரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி சமூகத்தில் இருந்து விலகி இருப்பது மட்டுமே என்பதால், மக்களுக்கு அனைத்து நாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டாலும், கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்றால் உலகில் 45,050 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT