உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 425 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

corona virus fatalities increased in china

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

17,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment