கொரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழப்பு 106 ஆக அதிகரிப்பு!

சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 4086 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe