ADVERTISEMENT

சீனாவில் முகமூடிகளுக்கு தட்டுப்பாடு... காய்கறி, பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் மக்கள்!

07:24 AM Jan 31, 2020 | suthakar@nakkh…


சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகமூடிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள்.


ADVERTISEMENT


இந்த நோய் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பெரும்பாலானவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதில்லை. வெளியிடங்களுக்கு செல்லும் போதும் முகமூடிகளை அணிந்து செல்கிறார்கள். இந்நிலையில், சீனாவின் பெரும்பாலான இடங்களில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரவுபகலாக முகமூடி தயாரிக்கும் கம்பெனிகள் உற்பத்தியில் ஈடுபட்டாலும் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகின்றது. இதனால் முகமூடி போன்று காய்கறிகள், பிளாஸ்டிக் பைகள், நேப்கின்கள் முதலியவற்றை முகமூடிகளாக பயன்படுத்துவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT