சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 602 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளது.மேலும் புதிதாக 5,560 பேருக்கு நோய் கண்டுபிடிப்பால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,176 ஆகஉயர்ந்துள்ளது.
Follow Us