இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், சிறப்புவிருந்தினர்களாக வெளிநாட்டு பிரதிநிகள் பங்கேற்பார்கள். அதேபோல் இந்தாண்டு குடியரசு தினவிழாவில், சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன்கலந்துகொள்ளவார் எனஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
ஆனால்பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவிவரும் சூழலில் இந்திய பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன். இதுதொடர்பான தகவலை மத்திய அரசுக்கு அந்நாட்டு அதிகாரிகள் முறைப்படி தெரிவித்துள்ளார்கள். இதனால் இந்த ஆண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் இல்லாமல்,குடியரசு தினம் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.