Skip to main content

நீர்யானைகளுக்கு கரோனா...!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

Corona for hippos ...!

 

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடி வருகிறது ஒவ்வொரு நாட்டு அரசுகளும். தற்பொழுது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் முதல்முறையாக நீர்யானைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியமில் உள்ள நீர்யானைகளுக்கு முதல்முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 'ஆன்ட் வெர்ப்' உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு நீர்யானைகளுக்கு மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் லேசாக இருந்ததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இரண்டு நீர்யானைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. நீர்யானைகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது” - ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Spanish and Belgium Prime Ministers condemned says Israel's action is unacceptable

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நேற்று (24-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

 

அதனை தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பேசியதாவது, “பிணைய கைதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன்படி, உதவி பொருட்கள் காசாவுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது. அதனால், நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்” என்று கூறினார்.  

 

 

Next Story

“நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படுகிறது” - ராகுல் காந்தி எம்.பி.

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Major incident on the country democratic institutions Rahul Gandhi MP

 

ஐரோப்பிய நாடுகளில் ஒரு வார காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

 

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரஸெல்ஸ் என்னும் இடத்தில் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

 

நாட்டின் 60 சதவீத மக்களின் உணர்வுகளை மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை. மணிப்பூரில் ஜனநாயக உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜி20 மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை. காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.