/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ad_3.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 85,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைதங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா தொற்று என்பது 12 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசு செய்வதறியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. அங்கு கடந்த சில வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள் முதலியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன,மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதுவரை மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளை ஹோட்டல் நிர்வாகத்துக்கு அமெரிக்க அரசு விதித்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று யோசித்த ஹோட்டல் முதலாளிகள் தற்போது இருக்கைகளுக்கு நடுவே பொம்மைகளை அமர வைத்துள்ளனர். இதனால் சமூக இடைவெளியைகடைக்குவரும் கஸ்டமர்கள் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)