/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/corona-death-final_2.jpg)
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரத்தில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா எனும் கொடிய வைரஸ் உலக அளவில் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்தாலும் இவ்வைரஸ் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளே திணறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மெக்ஸிகோவில் இறப்புசான்றிதழ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெக்ஸிகோவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,37,509 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்புஎண்ணிக்கை 67,781 ஆகவும், பாதிப்பில் இருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 5,31,334 ஆகவும் பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை காரணமாக அங்கு ஏற்பட்ட இறப்பு சான்றிதழ் பற்றாக்குறையை சமாளிக்க தற்போது புதிய சான்றிதழ்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கரோனா அதிகம் பாதித்த நாடுகள் வரிசையில் மெக்ஸிகோ எட்டாவது இடத்தில் இருந்தாலும், அதிக பலி எண்ணிக்கை வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)