ADVERTISEMENT

கரோனா தாக்குதல் - அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடும் உயர்வு!

11:54 PM Mar 24, 2020 | suthakar@nakkh…


சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


ADVERTISEMENT


இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்கிடையே வல்லரசான அமெரிக்காவையே இந்த வைரஸ் தாக்குதல் ஆட்டம் காண வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த நோய் தாக்குதல் ஆளாகி உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT