Corona for 1.84 crore people worldwide

Advertisment

உலக அளவில் 1.84 கோடி பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவுக்கு 6 கோடியே 96 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் மேலும் 48 ஆயிரம் பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 48,128 பேர்கள் கரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு மொத்த பாதிப்பு 48.61 லட்சமாக உள்ளது. பிரேசிலில்17,988 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 27.51 லட்சமாக உள்ளது. ரஷ்யாவில் 8.56 லட்சம்,தென்னாப்பிரிக்காவில் 5.16 லட்சம்,பெருவில் 4.33 லட்சம், ஸ்பெயினில் 3.44 லட்சம்,ஈரானில் 3.12 லட்சம்,பிரிட்டனில் 3.5 லட்சம் பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மேலும் 43 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் மொத்த பாதிப்பு என்பது 84,426 ஆக அதிகரித்துள்ளது.