அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேருபவர்களை கைது செய்யும் ட்ரம்பின் நடவடிக்கை ஏற்கனவே பல சர்ச்சைகளையும் உலக எதிர்ப்புகளைசந்தித்தது.அதாவது சட்டவிரோதமாக கைது செய்தவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்துவைத்ததே அந்த கடும் எதிர்ப்பிற்கு காரணம். உலக எதிர்ப்புகள் மட்டுமின்று அவரது மனைவி மெலானியாயும் குழந்தைகளை பிரித்துவைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து டிரம்ப் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துவைக்கும் நடவடிக்கையை கைவிட்டார். சட்டவிரோதமாக குடிபுகுபவர்களையும் அவர்களது குழந்தைகளையும் ஒரே இடத்தில் வைக்க உத்தரவிட்டார். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு,தற்போது நேற்றுஅமெரிக்க அதிபர் ட்ரெம்பின் மனைவி மெலானியா அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் அமையவிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கான காவல் மையத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அவர் உடுத்தியிருந்த உடை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவர் உடுத்தியிருந்த பச்சை நிற கோட்டின் பின்புறம் அதாவது முதுகுப்புறம் '' நான் உண்மையில் கவலைப்படவில்லை நீங்கள் '' (I really don't care to u ) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த உடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய மக்களை பற்றி தான் கவலைப்படமாட்டேன் என மெலானியா நினைக்கிறாரா? என அந்நாட்டு ஊடகங்கள் பெரும் சர்ச்சையுடன் அவரை விமர்சித்தது.
ஆனால் அந்த உடைவிவகாரத்தில் எந்த உள் அர்த்தமும் இல்லை என அவரது செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். மேலும் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் போலியாக சில செய்திகளை சித்தரிக்கும் ஊடங்களையே மெலானியா தனது உடையில் குறிப்பிட்டுள்ளார் எனவும்தெரிவித்துள்ளார்.