Advertisment

மோடியின் ஆழ்கடல் நீச்சல் குறித்து விமர்சனம்; மாலத்தீவில் 3 அமைச்சர்கள் நீக்கம்

Comment on Modi swimming in deep sea; 3 ministers sacked in Maldives

அண்மையில் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப்பாறைகளை படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடி ஆழ்கடலில் நீந்தியது பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக மாலத்தீவை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 'உயிர்காக்கும் உடை அணிந்த நரேந்திர மோடி இஸ்ரேலின் கைப்பாவை' என லட்சத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா குறிப்பிட்டிருந்தார். அதேபோல மற்ற அமைச்சர்களான மல்சா, ஹசன் ஹிஜான் ஆகியோர் மோடியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தனர். இந்த கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் வெளியாகியது.

Advertisment

மூன்று அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர்மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல்லா ஷாகித் ஆகியோர்கண்டம் தெரிவித்திருந்தனர். கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட மூன்று மாலத்தீவு அமைச்சர்களும் நீக்கம் செய்துமாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியாவும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

minister modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe