russia

ரஷ்யாவில் மாணவர் ஒருவர் தான் படிக்கும் கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் சென்று 17மாணவர்களை சுட்டுகொன்றுவிட்டு, தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் இதற்கு முன்னர் பலமுறை நடந்திருக்கிறது. ஆனால், ரஷ்யாவில் இதுவே முதல் முறை. கடந்த 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதை தன்னுடைய கனவாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றியுள்ளார். விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் என்ற 18 வயது மாணவர்தான் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார்.

Advertisment

ரஷ்யாவின் கிரிமையாவின் கெர்ச் என்னும் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் 17பேர் இறந்துள்ளனர், 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவருடைய கனவு இவ்வாறு வினோதமாக இருந்தாலும், இவரது மனநிலை நன்றாகவே இருந்துள்ளது. ரஷ்யாவில் மனநிலை சோதனை செய்த பின்தான் துப்பாக்கி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.